திங்கட்கிழமை, மே 25
Shadow

காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி பாலாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ்..!
பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.


நாச்சியார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் முடிவில் ஜோதிகா பேசம் கெட்ட வார்த்தையால் படம் சர்ச்சையிலும் சிக்கியது. இதையடுத்து படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

372 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன