வியாழக்கிழமை, ஜனவரி 1
Shadow

சிறை எனது 25வது படம் – விக்ரம் பிரபு

 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ்  இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ’சிறை’.

வரும்  டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களிடம் பேசியதாவது: சிறை எனது 25வது படம். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல கதை. அதில் என் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.

எனக்கும் மிகவும் பிடித்த தமிழ் சாரின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ். அவர் வெற்றிமாறன் சாரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி அதன் பின் இந்த பட்த்தை எடுத்திருக்கிறார், என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்.

எனக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனெக்கெடுகின்றேன். அப்படித்தான் இந்த படமும். டாணாக்காரன் போலீசுக்கும் இந்த பட போலீசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

கூட நடித்த அக்‌ஷய்குமார் புதியவரவு. எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்த்து. இதைதொடர்ந்து அடுத்தடுத்து சில படங்கள் கமிட் ஆகி இருக்கிறேன். அன்னை இல்லம் தொடர்பாக இனி எந்த கசப்பான தகவல்களும் வராது. எல்லாவற்றையும் நாங்கள் பேசி சரி செய்துவிட்டோம்.

அதிக படங்கள் அடுத்தடுத்து வராமல் போனதற்கு நானே காரணம்… ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து மக்களுக்கு கொடுப்போம் என்பதால் இந்த கேப். இனி அப்படி இருக்காது.

இந்த சிறை உண்மை சம்பவம் எனபதால் அதில் உள்ளவர்களை தேடினோம் கிடைக்கவில்லை. ஒருவேளை படம் ரிலீஸ் ஆனபிறகு அவர்கள் வரலாம். படம் கிறிஸ்மஸ் நாளில் ரிலீஸ் ஆகிறது. தெலுங்கில் நான் நடித்த படம் சரியாக ஓடாமல் போனது எனக்கு வருத்தமே. ரசிகர்களுக்கு பிடித்த வகையில் படங்களை தரவேண்டும். கும்கி பட்த்தில் எனக்கு என்ன கதை சொன்னாரோ அதை அப்படியே இயக்குனர் எடுத்தார். படம் பார்த்த சினிமா பிரபலங்கள் பலர் படம் போகாது என்றார்கள். ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் மக்கள் கொண்டாடினார்கள். அதால் மக்கள் ரசனையை கவனமாக பார்த்து படம் தரவேண்டும் என்றார்.

 

 

49 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன