திங்கட்கிழமை, மே 25
Shadow

படைப்பாளி வைரமுத்துவை தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகிவிட்டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லமல் போய்விட்டது.

மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசங்கள், கருவாச்சிக்காவியமும் எளிய மனிதர்களின் காப்பியமில்லையா.

அந்த அளவில் தமிழை எளிமை படுத்திய கவிஞனை இழி சொற்களால் எப்படி பேசலாம்.

வைரமுத்து தனி மனிதனல்ல. தமிழினத்தின் பெரு அடையாளம். ஒரு படைப்பாளன் தன் கருத்துக்களை சொல்லலாம். அல்லது மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை என இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘எவனுக்கும்’ அதிகாரமில்லை என பாஜகவைச் சேர்ந்த தேசிய செயலாளர்  H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து ஒரு புத்தகத்தில் இருந்த கருத்தை முன் வைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பாஜக ராஜா ஒரு பொதுக்கூட்டத்தில் வைரமுத்துவை மிக கேவலமாக விமர்சித்ததற்கு பதிலடியாகத்தான் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன