
தலை நகரின் தலைகுனிவு… அரசின் அலட்சியம்… அவலத்தின் உச்சம்… நாய் வண்டியில் பயணப்பட்ட சென்னைவாசிகள்..!
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படம் வெளியானதும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழகத்தின் தலை நகரில்… அதுவும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் 8 நாட்களை தாண்டியும் வேலை நிறுத்தம் செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத அரசின் அலட்சியப் போக்கால் நாய் பிடிக்கும் வண்டியில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
