திங்கட்கிழமை, மே 25
Shadow

ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

இந்துக்களின் தாயாராக கருதப்படும் ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு ஒரு கருத்தை பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ராஜா ஒருபடி மேலே போய் வைரமுத்துவையும் அவரது தாயாரையும் அவதூறாக பேச இப்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழும்பியது.

இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் இது குறித்து வெளியிட்ட கருத்து:
தங்கள் அலுவலகத்தில் பல இந்துக்கடவுள்களின் படங்களை வைத்திருக்கும் திரு பாரதி ராசா அவர்களே
தன் ரத்தம் அவமானப்படுவதை தட்டிக்கேட்பதை விட,வியாபாரத்துக்காக மீண்டும் சேர்ந்த நட்புக்கு குரல் கொடுக்க பாய்ந்து வரும் (என்)உயிர்த்தோழன்.

தவறு செய்தவரே மேலோட்டமாக மன்னிப்பு கேட்டபின் உங்களின் விவேகமில்லாத 4 பக்க ஆவேசத்துக்கு பதில் 4 வரியில் “வாயைக்கொடுத்து வாங்கி கட்டிகிட்டயே இது உனக்கு தேவையான்னு “கேட்டிருந்தீங்கன்னா நீங்க ஒரு நியாயவான்.இதில் ஆன்மீக இந்துக்களின் ஆதரவு 1% கூட உங்களுக்கில்லை.

ராஜா அவர்களும் வைரமுத்து அளவிற்கு தரம் தாழ்ந்து பேசியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இந்த விவகாரத்தில் எந்த சம்மந்தமும் இல்லாத அமெரிக்க ஆராச்சிக் கவிஞர் வைரமுத்துவின் தாயாரை கொச்சைப்படுத்தியிருக்க கூடாது. கோடிக்கணக்கான இந்துக்களின் தாயார் ஆண்டாள். இந்த எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம்.

704 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன