திங்கட்கிழமை, மே 25
Shadow

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து, தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.


கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார்.
அப்போது, அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்து அறிவிப்பேன். இதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்வேன் என அறிவித்தார்.
இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

466 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன