வியாழக்கிழமை, மே 28
Shadow

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வாழ்த்துச்செய்தியில் கடைசியாக பாபா முத்திரையும் இடம் பெற்றுள்ளது.

805 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன