வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட மாற்றுத்திறளானி சபரிவர்மன் குடும்பத்துக்கு சி.எம்.விஜய்யின் முன்னாள் மேனேஜரும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் ஒரு லட்சம் நிதி வழங்கினார்!

 

சபரி வர்மன் மனைவிக்கு ரூ. 1 லட்சம் உதவி

பி.டி.செல்வகுமார் வழங்கினார்

முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சபரி வர்மன் நாகர்கோயில் கிளைச்சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட  சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மனைவி ஆனந்தவள்ளிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.
இதையடுத்து, அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் விஜய் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதிரடியாக செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த அவரின் மனைவி, தந்தை, குழந்தை, சகோதரி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர்.
தற்போது, பெண்கள் பிரச்சினையில் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர் விஜய் அவர்கள், ஏழை மக்களின் வாழ்க்கையை நன்கு அறிந்தவர். எனவே, உயிரிழந்த சபரி வர்மன் மனைவிக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்குவதுடன், அப்பெண்ணின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை வழங்க வேண்டும். கண்டிப்பாக இதில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

இந்த பி.டி.செல்வகுமார் தான் த்ற்போதைய முதல்வர் ஜோசப்புவிஜய்க்கு 27 ஆண்டுகளுக்கும் மேலாக மேனேஜராக பணியாற்றியவர். அதோடு புலி என்ற படத்தையும் பலகோடி செலவில் தயாரித்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

67 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன