செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20
Shadow

கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும்ஹாரர் த்ரில்லர் படத்தின் தலைப்பு ‘யட்சிணி’!

 

ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் ஹாரர் த்ரில்லர் ‘யட்சிணி’!

கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட படத்தின் தலைப்பு – திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது!

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்திற்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்டுள்ளது. மர்மம், திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் த்ரில்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குப் படங்களையும், இளைஞர்களைக் கவரும் கமர்ஷியல் திரைப்படங்களையும் வழங்கியவர் இயக்குநர் ஆர். கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர், இறுதியாக வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் மூலமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்த வரிசையில், தற்போது ஹன்ஷிகா மோத்வானியை முதன்மைப் பாத்திரத்தில் வைத்து ‘யட்சிணி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் இளம்பெண், பல காலங்களுக்கு முன்பு ஒரு மன்னனால் கட்டப்பட்ட கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். அங்கு பொக்கிஷங்களைத் தேடும் முயற்சியில் அவர் எதிர்கொள்ளும் மர்மமான சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன. திகில் மற்றும் பரபரப்பு நிறைந்த திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஹன்ஷிகா மோத்வானி முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக அந்தச் சமூகத்தினருடன் பழகி, அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து பயிற்சியும் எடுத்துக்கொண்டுள்ளார். இந்தப் படம் தனது நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

படத்தின் முக்கியமான காட்சிகளுக்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் ரூ.60 லட்சம் செலவில் பிரம்மாண்டமான மலைக்குகை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 1943-ஆம் ஆண்டில் நடைபெறும் பின்னணிக் காட்சிகள் இந்த அரங்கில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் ஒளிப்பதிவுக்கும் இசைக்கும் படக்குழு முக்கியத்துவம் அளித்துள்ளது.

ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மெட்ரோ ஷிரிஷ், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மசாலா பிக்ஸ் (Masala Pix) நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர். கண்ணன் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். LV கணேஷ் முத்து இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை ஜான்சன் மேற்கொள்கிறார்.

படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரர் த்ரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.

‘யட்சிணி’ திரைப்படத்தை E5 எண்டர்டெயின்மெண்ட்ஸ்
ஜெ.ஜெயகிருஷ்ணன் வரும் நவம்பர் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன