வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

ஜெ.,மரண தேதி..! பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன்

ஜெ.,மரண தேதி..!
பல்டி அடித்த சசிகலா சகோதரர் திவாகரன்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் இன்று மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரரான திவாகரன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 4-12-2017 அன்று மாலை 5.15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் மறுநாள் 5-ம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் சசிகலா சகோதரர் திவாகரன் இன்று தெரிவித்துள்ளார்.


திவாகரனின் இந்த பேச்சு முன்னாள் முதல்வர் ஜெ., மரண சர்ச்சையில் மீண்டும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வட்டாரத்திலும் திவாகரன் பேச்சு பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தினகரன் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது “இது குறித்து தகவல் எதுவும் எனக்கு தெரியாது” என்று சொல்லிவிட்டார்.
இந்த நிலையில், திவாகரன் பேசிய சில மணி நேரங்களில் “தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா கிளினிக்கல் ரீதியில் மரணமடைந்தார். பயாலஜிக்கல் மரணம் ஏற்படாமல் தடுக்க உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

356 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன