வியாழக்கிழமை, மே 28
Shadow

ஒரே நாளில் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் நடத்திய 4 பட விழாக்கள்..!

 

ஒரே நாளில் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் நடத்திய 4 பட விழாக்கள்..!

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் சார்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியும், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், பாகமதி படங்களின் டிரைலர் வெளியீட்டு விழாக்களையும் சேர்த்து ஒரே இடத்தில் 4 படங்களின் மெகா சினிமா விழா நடத்தப்பட்டது.


மதியம் 3 மணிக்கு துவங்கிய விழா இரவு 10 மணிவரை நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஆர்யாவின் கஜினிகாந்த் பட டீசர் வெளியீடு நடைபெற்றது. இருட்டு அறையில் முரட்டுகுத்து பட நாயகன் கவுதம்கார்த்திக் டீசரை வெளியிட்டார்.
பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீசர் வெளியானது.


அதைத் தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. படத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன், செந்தில், சிவசங்கர்மாஸ்டர், மதுமிதா, சுரேஷ், அனிரூத், பட இயக்குனர் விக்னேஷ்சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழா முடியும் போது பட ஹீரோ சூர்யா தாமதமாக வந்து சேர்ந்தார்.


சூர்யா பேசும்போது, ‘ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். இந்த பட பிரமோஷனுக்காக பல ஊர்களில் தியேட்டர்களுக்கு போய் பார்த்து மக்கள் ரசிக்கும் சந்தோஷத்தை பார்த்து நானும் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன். பொங்கலுக்கு என் படம் ரிலீஸ் ஆகி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது இப்போது பொங்கல் நாளில் ரிலீஸ் ஆன படத்தை மக்கள் வரவேற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு காரணம், விக்னேஷ்சிவன் உழைப்புதான்’


விழாவின் கடைசியாக பாகமதி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா வெளியிட்டார். விழாவில் பட நாயகி அனுஷ்கா கலந்து கொண்டார். அருந்ததி பார்ட் 2 போல இந்த பாமதியும் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருகிறது.


தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரே நாளில் 4 படங்களின் நிகழ்ச்சி அடுத்தடுத்து ஒரே இடத்தில் அத்தனை திரையுலகங்களை அழைத்து வந்து நடந்தது இதுதான் முதல்முறை.


இந்த 4 படங்களையும் தயாரித்து ரிலீஸ் செய்வது ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் படநிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

454 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன