
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மேற்படி விமர்சனத்தை வெளியிட்ட தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சூழலில் சூர்யாவின் ரசிகர்கள் அந்த தனியார் சேனலுக்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதோடு, இன்று காலை அந்த தனியார் சேனல் அலுவலகம் முன்பு ‘மன்னிப்பு கேட்கக் கோரி’ போராட்டமும் நடத்தினர். 2000த்திற்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சூர்யாவிடம் குறிப்பிட்ட தனியார் டிவி நிர்வாகம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அதோடு அந்த நிகழ்ச்சியில் நக்கல் நையாண்டி செய்தவர்கள் மீதும் டிவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே சூர்யா ரசிகர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாம்.
332 Views
