
அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும்! இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை! ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்’’ என்றார்!

நிக்கி கல்ராணி பேசும்போது, ‘நான் இந்த படத்தில் நடிக்க ஒரே காரணம் இதில் எனக்கு ரஜினி சாரின் ரசிகை கேரக்டர் என்பதால் தான்! நிஜத்திலும் நான் ரஜினி சாரின் ரசிகை என்பதால் இந்த படத்தில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்தேன். இந்த படத்தில் விக்ரம் பிரபு சார் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவரோட இரண்டாவது கெட்-அப் சர்ப்ரைஸாக இருக்கும். இந்த விழாவுக்கு எப்படியாவது வர வேண்டும் என விக்ரம் பிரபு முயற்சித்தார் கடைசி நேரத்தில் அவரால் வர முடியவில்லை. விழாவுக்கு வாழ்த்து சொல்லி எனக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார்’’ என்றார்.

விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனம் தயாரிக்க்ம் படத்திற்கு ‘தர்மம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திய கதையாம் ‘தர்மம்’. இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வர, ‘பக்கா’ வெளியானதும் ‘தர்மம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகுமாம்.







