சனிக்கிழமை, மே 30
Shadow

உடைந்த காதலின் நினைவுகளை சுமக்க தனி மியூசியம்..!

காதல் யாருக்குத்தான் பிடிக்காது. கண்டதும் காதல், காணாத காதல், வாட்சாப் காதல், பேஸ்புக் காதல், ராங் நம்பர் காதல், போல பல வகையான காதல்கள் இருந்தாலும், ஒரே ஒரு வகையான ப்ரேக் அப் தான். எவ்வளவு காதல் செய்தாலும், பிரிந்து விட்டால், எந்த ஒரு செயலுமே செய்ய முடியாமல் தனிமையில் ஆழ்ந்து மிகவும் வருந்துவோம். காதலே கொடுமை, அதிலும், பிரிந்தால், அதிலிருந்து மீள்வது அதனினும் கொடுமை.

உங்களுக்கு ப்ரேக் அப் ஆன பிறகு, என்ன செய்வதென்று புரியாமல், அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களையும், அவர்கள் உங்களுக்குக் கொடுத்த பரிசுகளையும் வைத்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு இந்த இடம் அமையும். உலகில் எங்கெல்லாம் ப்ரேக் அப் ஆகி இருக்கிறதோ அதன் நினைவாக, க்ரூஷியாவில் மீயுசியம் ஆஃப் ப்ரோக்கன் ரிலேஷன்ஷிப்ஸ் என்ற பெயரில் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்காக தனியே அருங்காட்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த மியுசியத்தில், யார் வேண்டுமானாலும் தங்களது முன்னால் காதலின் மறக்க முடியாத நினைவு சின்னங்களையும் பொருட்களையும் இங்கு நீங்கள் தானம் செய்து விட்டு, நிம்மதியாக இருக்கலாம். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற காரணமும், அந்த நினைவு பொருள் பற்றிய தகவல் தர விரும்புவோர் அதன் குறிப்புகளையும் சேர்த்து கொடுக்கலாம்.

இங்கு, “I love you” என இருக்கும் கரடி பொம்மைகளில் இருந்து, அனைத்து வகையான நினைவு சின்னங்களும் இருக்கின்றன. இனி, தேவதாஸ் போல வெறும் நினைவுகளை வைத்துக் கொண்டு, தாடியும் பீடியுமாய் இல்லாமல் இலக்கை நோக்கி வாழ்க்கையைப் பயணித்து, உங்கள் கவலைகளை இது போல ஒரு அருங்காட்சியமாக மாற்றுங்கள்.

 

368 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன