வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களில் பல தற்போது மூடப்பட்டு விட்டன. மேலும், அந்த சமயத்தில் அவற்றை நடத்தியவர்களால் தப்பிப் பிழைத்து மீண்டும் தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தணை அதிகரித்தாலும், அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஜி.எஸ்.டியில் இருக்கும் குறைகளை, பிரச்சனைகளைச் சரிசெய்தால் அது நீண்ட நாட்களுக்கு பலனளிக்கும்” என்று தெரிவித்தார்

383 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன