
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.
அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுகவும் நடிகராக உள்ள உதய நிதியை அரசியல் களத்தில் பகிரங்கமாக இறக்கிவிட முடிவு செய்துள்ளது. அதன் முதல் படிதான் தாம்பரம் திமுக போராட்டத்தில் உதய நிதி கலந்து கொண்டது.
