சனிக்கிழமை, மே 30
Shadow

விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ மூலம் இசையில் இணையும் ராஜா குடும்பம்..!

‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதே கூட்டணி இணைந்த ‘தர்மதுரை’ சென்ற ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில் இவ்விருவரும் மீண்டும் ‘மாமனிதன்’ என்ற படத்தில் இணைகிறார்கள்.

இப்படம் குறித்தான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன் YSR Films சார்பாக தயாரிக்க இருக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.

மேலும் இசை ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா,கார்த்திக் ராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைக்கவுள்ளனர்.இவர்கள் மூவரும் இணைவது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சொல்லும் எதார்த்தமான படமாக மாமனிதன் இத்திரைப்படம் இருக்கும் என இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

 

443 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன