சனிக்கிழமை, மே 30
Shadow

இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்  கடந்த பத்து ஆண்டுகளில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக 20 – 24 வயது பெண்கள் காண்டம் பயன்படுத்துவது அதிகம் என தெரியவந்துள்ளது.

திருமணம் ஆகாத பெண்களும், பாலியல் தொழில் செய்யும் பெண்களும் பாதுகாப்பான முறையில் பாலுறவு செய்ய விரும்புகின்றனர்.

8 ஆண்களில் 3 பேர் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பு என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் ஆய்வில் தெரிகிறது

இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.

99% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். இதில் 15 – 49 வயதுடைய திருமணமான பெண்களில் 54% பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். 32% பேர் நவீன கருத்தடை முறைகளை பயன்படுத்துகின்றனர்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் போய் நாகரீக மோகத்தில் மேல் நாட்டு கலாச்சாரத்திற்கு நாடு முன்னேறியிருக்கிறதை இதுபோன்ற ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.

760 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன