புதன்கிழமை, ஜூலை 15
Shadow

ஆர்கானிக் திருடன் – விஜய்சேதுபதி விளக்கம்!

அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா முதலானோர் நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படம் வருகிற 2-ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, இந்த பட விளம்பரங்களில் ‘ORGANIC THIEF’ என்ற வார்த்தையை மையப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ‘ORGANIC THIEF’ என்றால் என்ன என்பதற்கு விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

‘ஒரு திருடன் திருடும்போது அந்த திருட்டு, யாரது மனதையும் புண்படுத்தவோ வேதனைப்படுத்துவது மாதிரியோ இருக்கக் கூடாது, அப்படி திருடுபவர் தான் ஆர்கானிக் திருடன்’ என்று விளக்கம் தந்துள்ளார் விஜய்சேதுபதி! ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்.

367 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன