சனிக்கிழமை, மே 30
Shadow

மார்ச் கடைசிக்கு போன விஷாலின் இரும்புத்திரை ரிலீஸ்..!

விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை’.
பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போகி வரும் நிலையில், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஜனவரி 26ம் தேதி என மாற்றப்பட்டது. பின்னர் பிப்ரவரி முதல்வாரம் எனற நிலையில் விஷாலே ரிலீஸ் தேதியை மார்ச் 29 என அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
331 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன