
இயக்குனர் ராஜா ராமன் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள படம் ‘வீரா’. இந்த படத்தில் நடிகர் கருணாகரன் நண்பன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாக்கியம் சங்கர் கதை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக தமிழ், கன்னடா, மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் ‘தீயா வேல செய்யணும் குமாரு’. இந்த படத்தில் நாயகி ஹன்சிகாவுக்கு தோழி கதாபத்திரத்தில் நடித்திருந்தார்
இதனை தொடர்ந்து இவர் நாயகியாக அறிமுகமாகும் படம் ‘வீரா’. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் இந்த படம் வெளியாகும் நாளில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாக இருந்தது. இதனால் திரையரங்குகள் கிடைக்காமல் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நடிகர் கிருஷ்ணா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் இந்த படம் உலகமெங்கும் பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாவதாக தெரிவித்துள்ளார்.
அதே நாளில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படமும், இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக் டிக் டிக்’ படமும் வெளியாகவுள்ளது. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமாகும். தற்போது இந்த படங்களுக்கு போட்டியாக கிருஷ்ணாவின் ‘வீரா’ படம் களமிறங்கியுள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 2,9,15,16 போன்ற தேதிகளில் நிறைய படங்கள் வெளியாகவுள்ளதால் இதில் எந்தெந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கும் என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
