புதன்கிழமை, செப்டம்பர் 9
Shadow

உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

நடிகா் பார்த்திபன் சமீபகாலமாக ரஜினி,கமல், ஏ.ஆா். ரகுமான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவா் எதற்காக அவா்களை எல்லாம் சந்தித்து வருகிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அது தற்போது தெரிய வந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரபலங்களை அவா் சந்தித்து வருகிறாராம்.

இவருடைய மகள் கன்னத்தில் முத்தம் இட்டால் மணிரத்னம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சில படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீா்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது.

339 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன