சனிக்கிழமை, மே 30
Shadow

காலாவிற்காக ரசிகர்களிடம் கருத்து கேட்கும் சந்தோஷ் நாராயணன்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0′ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா’ படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி – பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருக்கிறார்.
இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘காலா’ இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. ‘காலா’ படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!” எனக் கூறி, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90-2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து’ என நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறார்.
ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். இப்போது அந்த நான்கு ஆப்ஷன்களில் அதிக வாக்கு பெற்றிருப்பது, மேற்குறிய அனைத்தும் கலந்து என்பது. எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
341 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன