சனிக்கிழமை, மே 30
Shadow

3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்..!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் இம்ரான் கான் புஷ்ரா பிபி மேனகா என்ற ஆன்மீக ஆலோசகரை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது இம்ரான் கான் அந்த செய்தியை மறுத்தார்.

இந்நிலையில், மேனகாவை எளிமையான முறையில் லாகூரில் நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழா மேனகாவின் சகோதரர் வீட்டில் நடந்ததாக கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான முப்தி முகமது சயீத் இந்த திருமணம் குறித்து கூறுகையில், ‘இரண்டு இதயங்கள் மற்றும் ஆன்மாக்கள் இணைந்திருப்பதாக கூறினார். இம்ரான் கானின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

428 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன