வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

ஆண்டாள் கோவிலுக்கு நடிகை கவுதமி  வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர்  கூறியதாவது:-

ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன்.

புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் உயிர் வாழ இயலும். மன தைரியம் மிகவும் அவசியம். இதற்கு நான்தான் சாட்சி. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும். அரசுகள் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

நடிகர்கள் முதலில் அவர்களது கட்சியின் பெயர், கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கட்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் கவுதமி.

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் கொள்கை திட்டங்கலை அறிவிக்க வேண்டும் என சொல்லி நடிகர் கமல்ஹாசனை நடிகை கவுதமி சீண்டுகிறாரா என பரபரப்பாக பேசப்படுகிறது.

பல ஆண்டுகள் கமலுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்த கவுதமி சமீபத்தில் திடீரென கமலை விட்டு பிரிந்தார். அதன் பிறகு கமல் எந்த கருத்து சொன்னாலும் அதற்கு முரண்பட்ட கருத்தை தெரிவிப்பதை கவுதமி வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

679 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன