
நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக கருணாநிதி, விஜயகாந்த், முத்தரசன் ஆகிய மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார், தனது பாலிய நண்பரான ரஜினியிடமும் வாழ்த்து பெற்றிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் நாளை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, சென்னை வந்திருந்த கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளதாகவும், கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
