
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், துறைமுகத் திட்டம் குறித்து முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார். மேலும், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருவதாக சமீபத்தில் பேசியது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதாகத்தான் கூறினேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

357 Views
