
போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல்
ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்
திரையுலகில் சினிமா எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கு விழிபிதுங்கி ரத்தம் சுண்டி நாக்கு தள்ளி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்துதான் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகிறது.
இதற்கு காரணம், பல காரணங்களை சொல்லலாம். முக்கியமான காரணம், சரியான திட்டமிடுதல் இல்லாததுதான். விளம்பர மோகம் இருக்கிற சினிமாகாரர்களை நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் யாரும் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்பதற்கு இப்போது சொல்லப்போகும் செய்தி பெரிய உதாரணம்.
‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதைப்போலவே நுனி நாக்கு ஆங்கிலமும், பெண் என்ற தகுதியும் இருந்தால் போதும் யாரையும் ஏமாற்றி விடலாம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
சென்னை தி.நகரில் செயல்படும் விளம்பர நிறுவனம் இது… இந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒரு பெண். பெயர் அலமேலு. நுனி நாக்கு ஆங்கிலம் பேசி அனைவரையும் கவர்ந்திழுப்பதில் அசகாய சூரி.

முன்பு ஒரு காலத்தில் ஒரு பிரபல சேனலில் வேலை பார்த்த அனுபவம் மட்டுமே. அதை வைத்துக் கொண்டு தன்னிடம் இருக்கிற தகுதிளை வைத்து சொந்தமாக விளம்பர நிறுவனத்தை தொடங்கி ஒவ்வொரு பட நிறுவனமாக ஏறி இறங்கியதில் கை மேல் பலன்.
பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் நியாயமாக விளம்பரம் செய்கிறோம் என அணுகும் உண்மையானவர்களை பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டு அலமேலு மாதிரி நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி ஆளை வசீகரிக்கும் பெண்ணை நம்பி லட்சங்களையும், கோடிகளையும் வாரி கொடுத்து விட்டு நிறுவனத்தை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கிற நிறுவனம்தான் எல்ரெட் குமாரின் ‘ஆர்.எஸ்.இன்போடெய்ண்மெண்ட்’ இந்த நிறுவனம் பல படங்களை ஏற்கனவே எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறது. அப்படி இந்த நிறுவனத்தின் படம் தான் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக அலமேலுவுக்கு சொந்தமான ஸ்கை கமர்சியல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்காக அலமேலு கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய தொகை மட்டும் ஒரு கோடியே 76 லட்சத்து 31 ஆயிரத்து 283 ரூபாய். டிவி சேனல்கள், ரேடியோ, இணையதளங்கள், பேப்பர்கள், விளம்பர போர்டுகள் என பலவகையில் பட விளம்பரத்தை செய்வதாக சொல்லி இந்த தொகையை அலமேலு வாங்கியிருக்கிறார்.
ஆனால், சொன்னபடி பெரியதாக எந்த விளம்பரமும் செய்யவில்லை. அதோடு, வாங்கிய பணத்திற்கு மேல் விளம்பரம் செய்ததாக பில் அனுப்பி மேலும் பணம் கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில், அலமேலு அனுப்பி வைத்த பில்களை சரி பார்த்த எல்ரெட் குமாரின் பட நிறுவனம் அந்த பில்களில் பல போலியாக இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, பில் கொடுத்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில் சுமார் 28 லட்சத்து 77 ஆயிரத்து 596 ரூபாய்க்கு போலி பில் இருப்பது தெரியவந்ததும் பயங்கர அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதையடுத்து, ஸ்கை கமர்சியல் நிறுவனம் கொடுத்த அனைத்து பில்களும் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனது மோசடியான போலி பில் விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்தது தெரிந்ததும் ‘பெண்’ என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து பட நிறுவனத்தின் மேலாளர் மகேஷ் என்பவரை மிரட்டியிருக்கிறார். கேட்கிற பணத்தை கொடுக்காமல் போனால் வேறு மாதிரி போலீசில் புகார் கொடுத்து கம்பெனியை சந்திக்கு இழுத்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் நிறுவன மேலாளர் மகேஷ் சென்னை தேனாம்பேட்டை போலீசில் மோசடி பேர்வழி அலமேலு மீது புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் மீது போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்து முதல்தகவல் அறிக்கை போட்டிருக்கிறார்கள். அதில் போலியாக ஆணவங்களை உருவாக்குதல், நம்பிக்கை மோசடி (409, 420) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி பேர்வழி அலமேலு இதற்கு முன்பு முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் படங்களுக்கும் விளம்பரம் செய்திருக்கிறார். அங்கே எத்தனை கோடிகளை சுருட்டினார் என்பது தெரியவில்லை. தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் நிறுவனம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது கணக்கு வழக்குகளை சரி பார்க்க தொடங்கியிருக்கிறது. அதோடு, மோசடி பேர்வழி அலமேலு முந்தைய படங்களுக்கு விளம்பரம் செய்ததாக கொடுக்க அனைத்து பில்களையும் சரி பார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தெரிந்ததும் உதயநிதி ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.
போலி பில் விவகாரத்தில் பல கோடிகளை மோசடி பேர்வழியான அலமேலு சுருட்டிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால் பல தயாரிப்பு நிறுவனங்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். சமீபத்தில் மெகா ஹிட் அடித்த ஒரு பட நிறுவனம் தனது படத்தின் ஒட்டு மொத்த விளம்பர விஷயத்தையும் இந்த அலமேலுவின் நிறுவனத்திற்குதான் பல கோடி ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார். அந்த தொகையிலும் அலமேலு ஆட்டைய போட்டது எத்தனை கோடி என்பது தெரியாமல் வரவு செலவு பில் விவகாரங்களை பல நிறுவனங்கள் சரி பார்க்கும் பணி திரையுலகில் பரபரப்பாக நடந்து வருகிறது.
