
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார்.
இதனை அடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், கமல் மீனவர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார்.
“பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்
352 Views
