
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சம்தத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனே இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக விரைவில் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமலின் உதவியாளரும், ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா, ‘விஸ்வரூபம்-2’ டிரைலர் ரெடி என்றும் இந்த டிரைலர் மிக விரைவில் வெளியாகும்’ என்றும் அறிவித்துள்ளார்! இது கமலின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமல் அரசியல் களத்திற்கு வந்துள்ள சூழலில், இப்படத்தில் அரசியல் வசனங்களும் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
297 Views
