செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

வலிமிகுந்த நிஜம் யாழ்.. – விமர்சனம்

 

டேனியல் பாலாஜி, வினோத், சசி, நீலிமா,லீமா,மிஷா ரக்சனாவும் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாழ்’. இதில் ஈழத்துக் கலைஞர்களும் நடித்துள்ளனர். ஆதி கருப்பையா, நஸீர் ஒளிப்பதிவில், அருணகிரி இசையில் உருவான இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து எம்.ஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.

 ‘யாழ்’ திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது.இதில் இந்திய தமிழ் கதாபாத்திரம் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும்.பாடலாசிரியர்களும் இலங்கைத்தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை. வசனம் முழுவதும் இலங்கைத் தமிழ். 

‘யாழ்’ என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்படட ஒரு இசைக் கருவியாகும்.பாணர்கள் என்பவர்கள் இக் கருவியை வைத்துக்கொண்டு சைவ சித்தாந்தக் கருத்துக்களையம், தமிழர்களின் கலை, மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பியதால்தான் ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் வந்தது என்பதையும் குறிப்பிடுகிறார்கள். 

அந்த சூழ்நிலையிலும் காதல் வீரம் தாய்மை , பாசம் நட்பு என்று மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அந்த மக்களை கண் முன் நிறுத்துகின்றன காட்சிகள் .
 
சாதாரண மக்களை கூட சிங்கள ராணுவம் எத்தனை கொடுமைகள் செய்திருக்கிறது என்பதை மீண்டும் நம் கண் முன் நிறுத்துகிரது யாழ்.
“ஒரு காலத்தில் நெல் அறுவடை செய்த வயலில் இப்போது கண்ணி வெடி அறுவடை செய்கிறோம்” என்ற வசனம் பதற வைக்கிறது .
 
“என்னடா இன்னுமா கண்ணி வெடியை செயலிழக்க வைக்க முடியலை என்று , சிக்கிய சிங்கள ராணுவ வீரன் கேட்க
 
” இது புலிகள் வச்சது இல்லை சார் . நம்ம ராணுவம் வச்சது . சக்தி வாய்ந்தது ” என்று இன்னொரு சிங்கள வீரன் பேசும் வசனத்தின் கருத்தே நமது தமிழர்களின் நேர்மைக்கு ஒரு சான்றாக உள்ளது .

தாயை பிரிந்த குட்டிப்பெண், காதலியை தேடும் வாலிபன், காதலனை தேடி இலங்கை வரும் இளம்பெண் இந்த மூவரும்  கடைசியில் தேடியவர்களை கண்டுபிடித்தார்களா என்பதுதான் யாழ் கதையின் கிளைமாக்ஸ். 

யாழ் தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி. வலிமிகுந்த நிஜம் யாழ்..! 

349 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன