திங்கட்கிழமை, ஜூன் 1
Shadow

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி!

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது. 

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

டாடா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு அனுமதி கேட்டு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து கடந்த கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதியும், மார்ச் 5ம் தேதியும் நடைபெற்ற மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது

இதையடுத்து இந்த திட்டத்தைச் செயல்படுத்தலாம் என மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்ததையடுத்து, மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கூறியுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்காக முல்லைபெரியாறு அணையிலிருந்து தினமும் 340 கிலோ லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்துள்ளது.

நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பிருந்தால் 30 நாட்களில் பசுமை தீர்ப்பாயத்தை அனுகலாம் என்றும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

219 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன