ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரம்: காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!

 கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பெண் அதிகாரியைத் மிரட்டியதாக திமுக எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 10 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச்  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 114 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 26-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை செய்து அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை 5 மணிக்கு ஒட்டியிருக்க வேண்டும் எனவும்  ஆனால், ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் பல கூட்டுறவுச் சங்கங்களில் வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை எனவும் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறி வந்தனர்.
அதனையடுத்து வேட்பாளர் பட்டியல் ஒட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்ட தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர்  கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று சென்றனர். அப்போது எம்.எல்,ஏக்கள் வரும்போது இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏக்கள் தனிக்காட்டு ராஜாவை ஒருமையில் பேசினர். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் தனிக்காட்டு ராஜாவை தாக்க முற்பட்டார். அதுமட்டுமின்றி இளநிலை உதவியாளர் சுபாஷ் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார் உட்பட 11 பேர் மீது இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் “எம்.எல்.ஏ-க்கள் தகாத வார்த்தைகளால்  என்னைத் திட்டினர். கும்பலாக வந்து பணிசெய்யவிடாமல் தடுத்தனர், அலுவலக நாற்காலிகளைப் போட்டு உடைத்ததால் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது, துணைப்பதிவாளர் பிரியதர்ஷினியை தகாதவார்த்தைகளால் பேசியதுடன் இளநிலை உதவியாளர் சுபாஷை தாக்கினர். கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்துசெய்யும்படி மிரட்டினர்” என கூறப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து காவல்துறையினர் எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 10 பேர் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இணை பதிவாளர் அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி மற்றும் ஆஸ்டின் ஆகியோர் அமைதியாக இருந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
325 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன