காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிசார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக சார்பில், அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது..
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரம், நியூட்ரினோ ஆய்வு மற்றும் மீத்தேன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் தி.க. மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. தே.மு.தி.க.விற்கு தி.மு.க. சார்பில் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டது. ஆனால் அனைத்து கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க. கலந்து கொள்ளவில்லை.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி வணிகர் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.
ஆனால், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி நடத்த இருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வணிக சங்க பேரமைப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று ஸ்டாலின் கூறினார்.
முழு அடைப்பு போராட்டத்துக்கு, அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் ஆதரவு தர ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
மேலும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போது கருப்புக்கொடி காட்ட முடிவு எடுத்துள்ளோம்.
ஆளுநரை சந்திப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது. இது எடப்பாடி ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா என்று தெரியவில்லை என்று ஸ்டாலின் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது
திமுகவின் தீர்மானத்தை முழுமையாக காண இங்கே சொடுக்கவும்
https://drive.google.com/open?id=1kNZx4zE4e1OL8YKfS7R2yeRQ1oJwREC_
