சனிக்கிழமை, மே 30
Shadow

நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்‌ஷயா..!

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “

இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம்  நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது..

பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.   

                                 

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு  நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

விறு விருப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும்.

படப்பிடிப்பு மும்பை, மலேசியா,சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது, ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம்  திரைக்கு வர உள்ளது என்கிறார் அக்ஷயா.

சினிமாவில் மட்டுமல்ல பெரும்பாலும் பொது வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நிலவுகிறது. அதிலும் எனக்கு கசப்பான அனுபவம் எதுவும் நடை பெறவில்லை. இந்த யாளி படத்தை எடுத்து முடிக்க பல போராட்டங்களை கடந்துதான் வந்திருக்கிறேன்.  சில விஷயங்களை இப்போது கூறுவதை விட படம் வெளியானதும் பேசினால் நல்லது.

பின்னர் அக்‌ஷயாவின் அம்மாவும் இணைதயாரிப்பாளருமான லக்‌ஷ்மி அம்மாள் கூறும்போது: சினிமாவில் என் மகள் அறிமுகம் ஆன போது நாங்கள் யார் என்றே தெரியாமல் மீடியாக்கள்தான் உயர்த்தி வைத்தன. இப்போதும் நடிகை நிலையில் இருந்து பல போராட்டங்களை தாண்டி இயக்குனராக என் மகள் உங்கள் முன்னால் இருக்கிறார். அப்போது எப்ப்டி ஆதரவு கொடுத்தீர்களோ அதே போல இப்போதும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என கேட்டார்கள் சினிமாவில் மட்டுமல்ல எல்ல துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிலும் குறிப்பாக சினிமா நடிகைகள் என்றால் சுலபமாக அவர்கள் மீது அவதூறு வீசப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

340 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன