திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – ரெஜினா கசாண்ட்ரா இணைந்து நடித்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி’. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நடிகை ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ரெஜினா டப்பிங் பேசிய முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
388 Views
