புதன்கிழமை, மே 15
Shadow

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் திரையுலகப் பிரபலங்கள்

நீட் தேர்வு வி‌ஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வ தற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு உதவுவது என் கடமை.
அவர்களுக்கு உதவிக் கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 97104 44442. இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
இதேபோல் நடிகர் பிரசன்னாவும் நீட் தேர்வு எழுதவுள்ள இரண்டு பேருக்கான போக்குவரத்து மற்றும் மற்ற செலவுகளுக்கு பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். அதேபோல் நடிகை கஸ்தூரியும் அவரது டுவிட்டர் பக்கத்தில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பலரும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து வருகின்றனர்
198 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன