
தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் நாளில் இந்தியா 11 தங்கப் பதக்கங்களை வென்றது.
நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் எஸ். லோகேஷ் கலந்து கொண்டார். இவர் 7.7 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு தகுதியும் பெற்றார்.
306 Views
