
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
சிவா – அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச்சில் தொடங்க இருந்த படப்பிடிப்பு பட அதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிந்து மற்ற படங்களின் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், விஸ்வாசம் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கிறது. இதற்காக நடிகர் அஜித் ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் துவங்கி, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.
1,179 Views
