திங்கட்கிழமை, ஜூன் 1
Shadow

ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டம்

ரயில்வே ஊழியர்கள் இன்று முதல் 72 மணி நேரம் வேலை நிறுத்தம் போராட்டத்தை துவங்க உள்ளனர்

7-வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை ஹனியார் மையமாக்க கூடாது, தேசிய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வ்வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று முதல் ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 72 மணி நேர போராட்டத்தை துங்க உள்ளனர். ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்படி நடைபெற்றால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுத்து நிறுத்தும் வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

259 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன