
இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக வெற்றிப் படங்களாக கொடுத்ததைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஆனார். எதிர்மறை தலைப்புகளையே தொடர்ந்து தனது படங்களுக்கு வைத்தார்.
இந்தியா – பாகிஸ்தான், எமன், சைத்தான் என்று வரிசை நீண்டது. அவரது நடிப்பில் காளி படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அவர் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ என்ற தலைப்பிலும் ‘கொலைகாரன்’ என்ற தலைப்பிலும் நடித்துவருகிறார்.

அடுத்து ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் கதை. இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியை ஸ்டைலிஷாக மாற்றவிருக்கிறாராம் செந்தில்குமார்.
384 Views
