
நடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி.
இப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
338 Views
