செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது.
‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒரு பெண்ணை கற்பழித்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பிரதமர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் இல்லையெனில் நாடு திக்கற்று போகும்’ என ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும், ‘சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியுடன் இருப்பார்கள். தலித்துகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காங்கிரஸ் கடுமையாக தண்டிக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

367 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன