செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

செயல் விமர்சனம்

 

செயல் விமர்சனம்

நீதி நேர்மை நியாயம் பேசும் அம்மாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிற மகன்தான் கதைநாயகன். மார்க்கெட்டில் கண்ணுக்கு நேராய் நடக்கிற அநியாயத்தை அவன் யார் என்றே தெரிந்து கொள்ளாமல் தட்டிக்கேட்கிறான் ஹீரோ. அடிவாங்கியவன் மார்க்கெட்டில் பெரிய ரவுடியாக வலம் வருபவன்.
அடிவாங்கிய ரவுடிக்கு தான் அடிவாங்கிய அதே இடத்தில் ஹீரோவை அடித்தால்தான் மீண்டும் அந்த மார்க்கெட் கிடைக்கும் என்பதால் ஹீரோவை அடிக்க திட்டமிடுகிறான்.

கடைசியில் ஹீரோவை ரவுடி அடித்தானா இல்லையா என்பதுதான் ‘செயல்’ படத்தின் கதை.
ஏதோ சாதாரண ஒரு சம்பவம் போல இருந்தாலும் ஒரு புதுமுகம் ராஜன் தேஜேஸ்வருக்கு இயக்குனர் ரவி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.
இன்றைக்கு ஹீரோக்களாக இருக்கிற விஜய், சூர்யா போன்றவர்களின் முதல்படத்தில் இருந்த வேகத்தை தன் முதல் படத்திலும் காட்டுகிறார் புதுமுகம் ராஜன்.
நடிப்பு, ஆக்ஷன், நக்கல் என கலந்து கட்டி அடிக்க பயிற்சி எடுத்திருக்கிறார். புதுமுகம் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் ஆக்ஷன், காதல், மோதல் என எல்லாம் கலந்திருந்தாலும் அதற்குள் ஒரு ‘இஸ்ரோ’ தொடர்பான ஒரு தகவலையும் சொல்லி படிக்கிற பசங்க எப்படியிருந்தாலும் படிச்சிடுவாங்கன்னு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவி.
ரவுடியாக வரும் நடிகரும் கடைசிவரை ரவுடித்தனம் பன்ன முயற்சித்து சிரிப்பு ரவுடியாக மாறிவிடுகிறார்.

என்னதான் ஊருக்குள் ரவுடியாக பயமுறுத்தி வலம் வந்தாலும் பொண்டாட்டியிடம் அடிவாங்காத ரவுடிகளே இல்லை என்ற நிஜத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் இயக்குனர்.
ஹீரோயின் தருஷி அழகாகவும் இருக்கிறார் நடிக்கவும் செய்கிறார். நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழில் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

பெரும்பாலும் இதுபோன்ற புது தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வரும்போது கதையை விட அதில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் தன் மகனுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றே விரும்புவார்கள் ஆனால் இந்த செயல் படத்தின் கதையில் ஹீரோவுக்கான முக்கியத்துவத்துடன் மாணவர்கள் எந்த சூழலிலும் படிப்பை விட்டுவிடக்கூடாது என்ற கருத்தையும் சொல்லும் விதமாக படமாக்கியிருக்கிறார்

சி.ஆர்.கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன்.
இயக்குனர் ரவி அப்புலு கதையிலும், ஆக்ஷனிலும், காமெடியிலும், சென்டிமெண்டிலும் கவனம் செலுத்தியதுபோல பாடல்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் ரசிகர்கள் பாடலுக்காவது உள்ளே வந்து படத்தை ரசித்திருப்பார்கள்.


அதைப்போலவே அடித்து துவைத்து வெளுத்து வாங்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் வாய்ஸ் மட்டும் வேறு யாராவது பேசியிருந்தால் ‘தெலுங்கு வாடை’யை தவிர்த்திருக்கலாம். காட்சிகள் இன்னும் பலப்பட்டிருக்கும். முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணி,தீப்பெட்டி கணேசன், ரேணுகா என பலரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.


மொத்தத்தில் ஒரு அறிமுக ஹீரோவாக ராஜன் தேஜேஸ்வர் ‘செயல்’ மூலம் ரசிகர்கள் மனசில் நிற்பார் என்பதில் மாற்றம் இல்லை.
நல்ல படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு லேட்டாகத்தான் புரியும்… அது புரியும்போது படம் தியேட்டரில் இருக்காது. ‘செயல்’ படமும் இந்தவகைதான்..!

கோடங்கி

381 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன