திங்கட்கிழமை, செப்டம்பர் 28
Shadow

விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

அஜித் – இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘.
இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. சமீபத்தில் ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது.
மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறாராம். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதபாத்திரங்களில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன