வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெற்ற நிலையில், டீசரை அதிக எதிர்ப்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
236 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன