வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட கன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி குமாரசாமியை நேற்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

தண்ணீர் பிரச்சனையோ அல்லது வேறு எந்த பிரச்சனையோ மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டால், அதை  தீர்த்து வைப்பது தான் மாநில அரசுகளின் கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வல்லுனர்களின் ஆலோசனையோடு இத்தகைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். சினிமா துறைக்கு எல்லை கிடையாது ஆகவே எந்த பிரச்சனைகளுக்காவும் அது பாதிக்கப்படக்கூடாது.

நான் ஒப்புக்கொள்கிறேன், காவிரி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஆனால், கர்நாடகத்தில் காலா படம் திரையிட தடை வித்தித்திருப்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.

ஒரு குறிப்பிட்ட சிலர் கர்நாடகாவில் எந்த படத்தை திரையிடலாம் அல்லது கூடாது என முடிவு செய்வது தவறாகும். இந்த முடிவு படத்தை தயாரித்தவர் அல்லது அந்த படத்தில் நடித்திருப்பவர்களை மட்டுமே பாதிக்குமே தவிர அதை கடந்து வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே ஒருசில அரசியல் காரணங்களுக்காக திரைப்படத்துரையினரின் வருமானத்தை நாம் இழக்கச்செய்யலாமா ?

எனவே காலா படத்தை கன்னட மக்களிடம் விட்டுவிடுவோம், அப்படத்தை பார்ப்பதா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். இந்த விவகாரத்தில் இதுவே எனது கருத்து.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

252 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன