
சத்தமில்லாமல் பைக்கில் வந்து ஆறுதல் கூறிய விஜய். தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் திரையுலக பிரபலங்களில் விஜய் மனித நேயத்துடன் நடந்து கொண்டார். ரஜினி போவதற்கு முன் நான் நடிகனாக போகிறேன் மக்களை சந்தோஷப்படுத்த என்று சொல்லிவிட்டு… அங்கே போய் மக்கள் நன்மைக்காக போரடியவர்களை சமூக விரோதிகள் என் சொல்லிவிட்டு வந்த ரஜினியின் “சினிமா அரசியல்” … முன்பாக அறிவித்து ஆர்ப்பாட்டமாக போய் திரும்பிய கமல் அரசியல்… இவைகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அறிவிப்பு இல்லாமல் பைக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளுக்கு பந்தா இல்லாமல் போன நடிகர் விஜய் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவரே..! – கோடங்கி

357 Views
