புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் அவசரநிலை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.
தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன