சனிக்கிழமை, மே 30
Shadow

ராஜ்தாக்ரேவிடம் அரசியல் பேசினாரா லதா ரஜினி – வெளிப்படும் வாரீசு அரசியல்

ரஜினிகாந்த் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வாரிசு அரசியலா?

மும்பையில் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்ரேவை, நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளது பல தளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். இதன்பிறகு பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார்.

சென்னைக்கு வந்து நடிகராகி முன்னணி ஸ்டாராக மாறியுள்ளார். இருப்பினும், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ரஜினிகாந்த். கடந்த 2010ம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த், அவரை தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார். மகாராஷ்டிராவில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மண்ணின் மைந்தர்கள் மராட்டியர்கள் என்று கூறி அதற்காக நடந்த தாக்குதலில் முன்னின்றவர் என்ற குற்றச்சாட்டு மறைந்த பால் தாக்ரே மீது உள்ளது. பால்தாக்ரே தனக்கு கடவுளை போன்றவர் என ரஜினிகாந்த் கூறியதால் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கூறியுள்ள சூழலில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும், பால் தாக்ரேவின் மருமகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜ்தாக்ரே வெளியிட்ட ட்விட்டிலும் கூட, லதா ரஜினிகாந்த்துடன் அரசியல் குறித்தெல்லாம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சியை ரஜினி ஆரம்பிப்பதாக கூறினாலும், லதா ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. விஜயகாந்த் என்னதான் வெளிப்படையான தலைவராகவும், தைரியமான தலைவராகவும் அறியப்பட்டாலும் அவர் மனைவி பிரேமலதா கட்சிக்குள் முக்கிய முடிவுகளை எடுக்க துவங்கியதால்தான் தேமுதிகவுக்கு சரிவு ஏற்பட்டது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். விஜயகாந்த்தின் உடல்நிலை பிரேமலதாவை உள்ளே வர வைத்திருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ஆக்டிவாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், லதா அரசியல் விவகாரங்கள் பற்றி ராஜ்தாக்ரேவிடம் ஆலோசிக்க வேண்டிய தேவை வந்துள்ளது என்பது ரஜினி ரசிகர்களுக்கே சற்று ஜெர்க் ஏற்படுத்தும் விஷயம்தான்.

393 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன